உடனடிச்செய்திகள்
» திருச்செந்தூர் முருகன் திருக்கோயில் குடமுழுக்கைத் தமிழிலேயே நடத்தக் கோரி மாபெரும் மக்கள் இயக்கம்! தெய்வத் தமிழ்ப் பேரவை செயற்குழுவில் தீர்மானம்!» 2025-2026 கல்வியாண்டில் மருத்துவம் - பொறியியல் கல்வி அனைத்துப் பிரிவுகளும் தமிழ்வழியில் வேண்டும்! சித்த மருத்துவம் தமிழில்தான் வேண்டும்! பெ. மணியரசன்» காஞ்சி சங்கர மடத்தின் இளம் பீடாதிபதியாக, தெலுங்கு திராவிட பிராமணர் கணேச சர்மா திராவிட் நியமனம்!ஐயா பெ. மணியரசன்» அதிகாரப் போட்டிக்காக மாணவர்களின் கல்வியை பாழாக்கத் துடிக்கிறார் ஆளுநர் ஆர்.என். இரவி!கி. வெங்கட்ராமன்» தி.மு.க. ஆட்சியின் மாநில சுயாட்சி தீர்மானம் வெற்று ஆரவாரமே! கி. வெங்கட்ராமன் அறிக்கை!» பாவேந்தரைக் கொண்டாட மறந்ததேன்? பெ. மணியரசன்

Wednesday, July 20, 2011

தமிழக பெட்ரோல் வளங்களை தமிழக அரசிடமே ஒப்படை- த.தே.பொ.க. ஆர்ப்பாட்டம்!

தமிழக பெட்ரோல் வளங்களை தமிழக அரசிடமே ஒப்படை!

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஆர்ப்பாட்டம்!

 

சென்னை, 20.07.2011.


பெட்ரோல், டீசல் விலை குறைக்க தமிழகத்தில் கிடைக்கும் பெட்ரோல் மற்றும் எரிவளி(கேஸ்) வளங்களை இந்திய அரசு தமிழக அரசிடமே ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தி 23.07.2011 அன்று சென்னையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்துகின்றது.

 

தமிழகத்தில் பெட்ரோல், டீசல், எரிவளி(கேஸ்), மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலையைக் குறைக்க தமிழகத்தின் நரிமணம், அடியக்க மங்கலம், கோவில் களப்பால், கமலாபுரம், புவனகிரி ஆகிய இடங்களில் கிடைக்கும் பெட்ரோலியத்தையும் குத்தாலத்தில் கிடைக்கும் எரிவளியையும்(கேஸ்) இந்திய அரசு தமிழக அரசிடமே ஒப்படைக்க வேண்டும்.

 

பற்றாக்குறைக்கு வெளிநாடுகளில் கச்சா எண்ணெய் வாங்கத் தமிழக அரசுக்கு அனுமதியும் வெளிநாட்டுப் பணமும் இந்திய அரசு வழங்க வேண்டும்.

 

தமிழக அரசு இக்கோரிக்கைகளை இந்திய அரசிடம் வலியுறுத்திப் பெற வேண்டும். பெட்ரோலியம் உற்பத்தியாகும் தமிழ்நாட்டில் வாழும் மக்களுக்கு அரபு நாடுகளில் இருப்பதைப் போல மலிவு விலையில் பெட்ரோலியப் பொருள்களை வழங்க வேண்டும்.

 

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன்பு 23.07.2011 காரிக்(சனி)கிழமை மாலை 5 மணிக்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகின்றது.

 

ஆர்ப்பாட்டத்திற்கு த.தே..பொ.க. பொதுக்குழு உறுப்பினர் தோழர் க.அருணபாரதி தலைமை தாங்குகிறார்.

 

ஆர்ப்பாட்டத்தில் தமிழுரிமைக் கூட்டமைப்பின் தலைவர் புலவர் கி.த.பச்சையப்பனார், உலகத் தமிழ்க் கழகத்தின் பொதுச் செயலாளர் தோழர் த.அன்புவாணன், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன், தமிழர் உலகம் ஆட்சிக்குழு உறுப்பினர் பொறியாளர் சி.பா.அருட்கண்ணனார், த.தே.பொ.க. தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல்.ஆறுமுகம், தமிழக இளைஞர் எழுச்சிப் பாசறை ஒருங்கிணைப்பாளர் தோழர் சதீசுகுமார் ஆகியோர் கண்டன உரையாற்றுகின்றனர். 

 

த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினரும் தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழின் இணையாசிரியருமான தோழர் கி.வெங்கட்ராமன் ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து உரையாற்றுகிறார்.

 

ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசிய உணர்வாளர்களும் பொது மக்களும் திரளாக கலந்து கொள்ள வேண்டுமென தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. 

போராட்டங்கள்

தமிழர்களின் தொழில் வணிகத்தை ஆக்கிரமித்துள்ள மலையாள ஆலுக்காஸ் நகைக் கடையை முற்றுகையிடப்பட்ட வழக்கிலிருந்து தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள் விடுதலை!

தமிழர்களின் தொழில் வணிகத்தை ஆக்கிரமித்துள்ள மலையாள ஆலுக்காஸ் நகைக் கடையை முற்றுகையிடப்பட்ட வழக்கிலிருந்து தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள் விடுதலை! தமிழ்நாட்டின் தொழில், வணிகம், கல்வி,......

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT