உடனடிச்செய்திகள்
» அதிகாரப் போட்டிக்காக மாணவர்களின் கல்வியை பாழாக்கத் துடிக்கிறார் ஆளுநர் ஆர்.என். இரவி!கி. வெங்கட்ராமன்» தி.மு.க. ஆட்சியின் மாநில சுயாட்சி தீர்மானம் வெற்று ஆரவாரமே! கி. வெங்கட்ராமன் அறிக்கை!» பாவேந்தரைக் கொண்டாட மறந்ததேன்? பெ. மணியரசன்» பொன்முடி - துரைமுருகன் - ஆர்.எஸ். பாரதி இழி பேச்சுகள் - ஈ.வெ.ரா. பாணி! கண்ணியத்துடன் – துணிவுடன் கருத்துகளைப் பகிர்வது தமிழர் மரபு! பெ. மணியரசன்» இந்திய தேசியத்தில் இருந்தாலும் இனத்தேசியத்தில் கால்பதித்தவர் குமரி அனந்தன்! பெ. மணியரசன்» ஆளுநர் இரவி தானே பதவி விலக வேண்டும் அல்லது குடியரசுத் தலைவர் அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்! பெ. மணியரசன் கோரிக்கை!

Wednesday, June 6, 2012

ஊடகச் செய்தி(06.06.2012) இராசபக்சேவை கைது செய்! - சென்னை பிரிட்டன் தூதரகத்தில் உணர்வாளர்கள் வலியுறுத்தல்!



இராசபக்சேவை கைது செய்! - சென்னை பிரிட்டன் தூதரகத்தில் உணர்வாளர்கள் வலியுறுத்தல்!

 

ஒன்றரை இலட்சம் தமிழீழ மக்களைக் கொன்று குவித்த சிங்களத் குடியரசுத் தலைவரும், போர்க்குற்றவாளியுமான இராசபக்சேவை பிரிட்டனிலேயே கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தியும், பொதுநல ஆயநாடுகள் கூட்டமைப்பிலிருந்து இலங்கையை வெளியேற்றக் கோரியும், இன்று[06-06-12] காலை 10.30 மணிக்கு, சென்னை பிரித்தானிய துணைத் தூதரகத்தின் முன் அனைத்து கட்சி மற்றும் இயக்கங்களின் ஒன்று கூடல் நடைபெற்றது.

 

நிகழ்வை, மே பதினெழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் ஒருங்கிணைத்தார். ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு. மல்லை சத்யா, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கப் பொறுப்பாளர் தோழர் பாவேந்தன், த.மு.மு.க. பொறுப்பாளர் ஆருண் ரஷீத், நாம் தமிழர் கட்சி இணையதளப் பாசறைப் பொறுப்பாளர் தோழர் பாக்கியராசன், பெ.தி.க. தென் சென்னை மாவட்டச் செயளாலர் தபசிக்குமார், இயக்குநர் புகழேந்தி தங்கராசு, பேராசிரியர் சரசுவதி உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்களும் நிர்வாகிகளும் இதில் பங்கேற்றனர். 

 

"கைது செய்! கைது செய்! இனப்படுகொலை போர்க்குற்றவாளி இராசபக்சேவை கைது செய்" என்பன போன்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

 

பின்னர், பிரிட்டன் துணைத் தூதரக அலுவலகத்தில் இராசபக்சேவை இங்கிலாந்திலேயே கைது செய்யக் கோரும் விரிவான கோரிக்கை மடல் பொறுப்பாளர்களால் அளிக்கப்பட்டது. 

 




போராட்டங்கள்

தமிழர்களின் தொழில் வணிகத்தை ஆக்கிரமித்துள்ள மலையாள ஆலுக்காஸ் நகைக் கடையை முற்றுகையிடப்பட்ட வழக்கிலிருந்து தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள் விடுதலை!

தமிழர்களின் தொழில் வணிகத்தை ஆக்கிரமித்துள்ள மலையாள ஆலுக்காஸ் நகைக் கடையை முற்றுகையிடப்பட்ட வழக்கிலிருந்து தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள் விடுதலை! தமிழ்நாட்டின் தொழில், வணிகம், கல்வி,......

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT